சமுக சேவகரும், தொழிலதிபருமான யோ.நிவேதனின் ஏற்பாட்டில் அமெரிக்காவின் சமூக சேவை நிறுவனமான ரைஸ் ஸ்ரீலங்கா(Rise SriLanka) நிறுவனத்தின் நிதி உதவியின் மூலமாக வறுமை கோட்டுக்கு உட்பட குடும்பத்துக்கான வீடு ஒன்றினை கட்டி வழங்கவும் திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ லால் டி சில்வா, யோ.நிவேதன், மற்றும் இந்த திட்டத்தை மேற்பார்வை செய்யும் இணைப்பாளர் ந.பாண்டியராஜன் ஆகியோர் இந்த வீடு கட்டும் உதவி திட்டத்தை பயனாளிக்ளுடன் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
இன்று (21/10/2021) வியாழக்கிழமை சமய வழிபாட்டுடன் அத்திவார அடிக்கல் நாட்டி இந்த வீடு கட்டும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட் ன.
அமெரிக்காவின் ரைஸ் ஸ்ரீலங்கா நிறுவனம் பல உதவி திட்டங்களை இலங்கையில் செய்து வருவதாக இந்த உதவி திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட யோ.நிவேதன் தெரிவித்தார்.