கறுப்பு ஜுலையை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கறுப்பு ஜுலையை முன்னிட்டு சோசலிச வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். 

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (23.07) மாலை கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. 

கறுப்பு ஜூலையை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் தடை விதித்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் லிப்டன் சுற்றுவட்ட பகுதியில் இருந்து விகாரமஹாதேவி பூங்காவை நோக்கி நகர முற்பட்டுள்ளனர் எனவும், இதனையடுத்தே பொலிஸாரும், கலகத் தடுப்புப் பிரிவினரும் இணைந்து நீர்த்தாரை பிரயோகம்  நடத்தியுள்ளதாகவும்  கூறப்படுகிறது. 

நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார், கலவர எதிர்ப்பு மற்றும் இராணுவத்தினரை அழைத்திருந்தாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version