கட்டட வடிவமைப்பாளர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு!

யாழில் கட்டட வடிவமைப்பாளர் பயிற்சியை நிறைவு செய்த பயனாளிகளுக்கு தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் ( NVQ level -iii )வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் (24.07) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிர்மாணக் கைத்தொழில் அதிகாரசபை (CIDA) மற்றும் தேசிய கைத்தொழில் பயிற்சிஅதிகாரசபை (NAITA)இணைந்து நடாத்திய கட்டட வடிவமைப்பாளர் (குழாய்பொருத்துனர்), கட்டட வடிவமைப்பாளர் (மேசன்) பயிற்சியை நிறைவு செய்த 32 பேருக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுக்கு மூன்று மாத பயிற்சியின் போது மாதம் 10,000 ரூபாய் ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டுள்ளதுடன் பயிற்சியின் முடிவில் 5000 ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ,NAITA மாவட்ட முகாமையாளர், CIDA மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திறன் விருத்தி மாவட்ட இணைப்பாளர் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version