ஹர்த்தாலுக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு தெரிவிக்குமா?

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வெள்ளிக்கிழமை கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் வவுனியா வர்த்தகர் சங்கம் நாளை (28.07) இவ்விடயம் தொடர்பாக கூடி முடிவை அறிவிக்கும் என சங்கத்தின் செயலாளர் அம்பிகைபாகன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பாக நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந் நிலையில் வவுனியா வர்த்தகர் சங்கம் இதற்கு ஆதரவு தெரிவிக்குமா என சங்கத்தின் செயலாளர் அம்பிகைபாகனிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளிக்கும்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

இதுவரை எமக்கு எவரும் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கவில்லை. எனினும் பொது அறிவித்தலாக இருக்குமாக இருந்தால் நாளை (வெள்ளிக்கிழமை) வர்த்தக சங்க நிர்வாகம் கூடி முடிவை அறிவிக்கும் எனத் தெரிவித்தார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version