ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா நேற்று (28.07) இரவு இலங்கை வந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 20 பேர் கொண்ட குழுவுடன் அவர் இலங்கை வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான யு. L-196 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினரை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.
இலங்கை பிரமுகர்களை சந்தித்த பின்னர் இந்த குழு இன்று (29.07) இரவு மீண்டும் ஜப்பான் நோக்கி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.