வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு!

வவுனியா நொச்சுமோட்டையில் இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியினர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் வீட்டில் திருடவும் முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த வீட்டின் உரிமையால் வாளை பறித்து திருடர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் திருடர்கள் காயமடைந்த நிலையில், தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் வீடொன்றில், மாரிமுத்து செல்வநாயகம், அவரது மனைவி செல்வராணி ஆகிய இருவரும்

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த நிலையால் திருடர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீட்டினுள் புகுந்து இருவர் மீதும் வாளால் வெட்டியுள்ளனர். 

இந் நிலையில் மா. செல்வநாயகம் திருடர்கள் கொண்டுவந்த வாளை பறித்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் திருடர்களில் ஒருவன் காயமடைந்த நிலையில் வீட்டில் இருந்த தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version