ஈஸ்டர் தாக்குதளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்காமல் விடுவிப்பது பொருத்தமானதல்ல என பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச போர் ஆய்வாளர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் சந்தேக நபர்களுக்கான புனர்வாழ்வுத் திட்டம் எதுவும் ஆரம்பிக்கப்படாதது குறித்து தாம் வருந்துவதாகவும், புனர்வாழ்வுத் திட்டம் இன்றி விடுவிக்கப்பட்டால் நாட்டில் மீண்டும் இவ்வாறான தாக்குதல் இடம்பெறலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version