முல்லைத்தீவில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!

முல்லைத் தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு ,சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி ,சட்டவிரோத காடழிப்பு போன்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி மாவட்டத்தையும் எதிர்கால தலைமுறையினரையும் பாதுகாக்கும் வகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது. கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் கடந்த (29.07) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ.உமாமகேஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், முல்லைத்தீவு உதவிபொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், திணைக்களத்தின் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version