வவுனியா உப தவிசாளருக்கு சுரேன் ராகவன் அஞ்சலி

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் வெள்ளைச்சாமி மகேந்திரன் சுகயீனம் காரணமாக இறந்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிரதிநித்துவப்படுத்தும் இவரின் மறைவுக்கு, அந்த கட்சியின் வன்னி மாவட்ட தலைவரும், மத்திய குழு, மற்றும் ஆட்சி குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன் தனது அஞ்சலிகளை தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் உப தவிசாளருமான கௌரவ வெள்ளைச்சாமி மகேந்திரன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைகின்றேன்.

பொதுநலனை நோக்காகக் கொண்டு மக்கள் சேவை புரிந்த
திரு மகேந்திரன் அவர்களின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமன்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் வவுனியா மாவட்ட மக்களுக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.

திரு வெள்ளைச்சாமி மகேந்திரன் அவர்களின் திடீர் மறைவினால் துயருற்றுள்ள திரு மகேந்திரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கட்சியின் அங்கத்தவர்களுக்கும் கட்சியின் தலைவர், செயலாளர் சார்பிலும் என் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து நிற்கிறேன்.”

திரு மகேந்திரனின் ஆன்மா சாந்தி அடைவதாக!

என தனது இரங்கல் செய்தியில் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

வவுனியா உப தவிசாளருக்கு சுரேன் ராகவன் அஞ்சலி
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version