உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுமா?

சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

 இந்த அமைச்சரவைப் பத்திரம் கடந்த வாரம் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட போது, ​​பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

 மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால், சமனல ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்த அமைச்சரவை பத்திரம் மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version