திருகோணமலையில் விமானம் விபத்துக்குள்ளானது!

திருகோணமலையில், சீனக்குடா விமான பயிற்சி நிலையத்தில், பயிற்சியில், ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில், இருவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (07.08) இடம்பெற்றுள்ளது.

விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட PT 6 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version