தமிழக தொலைக்காட்சியில் கலக்கிய மலையக சிறுமி!

இந்தியாவில் நடைபெற்று வரும் ரியாலிட்டி ஷோவான ”சரிகமபா” என்ற நிகழ்ச்சியில் மலையகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கலந்துகொண்டுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஸா என்ற சிறுமி ஏற்கனவே பாடி வருகின்ற நிலையில், தற்போது இலங்கையை சேர்ந்த மற்றுமொரு போட்டியளாராக கனகராஜ் அசானி என்ற சிறுமி இணைந்துக்கொண்டுள்ளார்.

இவர் கண்டி, புஸ்ஸலாவைச் சேர்ந்தவராவார். தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ஆரம்பத்தில் நடைபெற்ற போட்டிகளை தவற விட்டிருந்த அவருக்கு தற்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளனர்.

இதன்படி நேற்றைய போட்டியில் அவர் ”ராசவே உன்னநம்பி” என்ற பாடலை பாடியிருந்தார். அவருக்கு அரங்கத்தில் இருந்த பலர் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் மாணவர்கள் குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது இங்குள்ள அனைவருக்கும் பெருமையை தேடித்தந்துள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version