கலைஞர் மு.கருணாநிதியின் நினைவுதினம் இன்று

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்- திருப்பூர் தெற்கு மாவட்டம்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (07.08) பல்வேறு பகுதிகளிலும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வுகளின் ஒரு பகுதியாக தமிழகத்தின் மேற்கு மண்டலம் திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், உளுந்தூர் நகர செயலாளர் தண்டபாணி, இளைஞர் அணியின் செயலாளர் சரவணன் உட்பட பல முக்கியஸ்த்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவுதினம் இன்று
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version