உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் இலங்கை வங்கியும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பிரிட்டனில் உள்ள தி பேங்கர் பத்திரிகை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2012ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 12 வருடங்களாக, இலங்கை வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாகவும், உள்நாட்டில் முதலிடத்திலும் உள்ளது.