கந்தானை ஆலய வீதி பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08.08) காலை ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறிய புகையால் சுவாசக்கோளாறு ஏற்பட்ட பாடசாலை மாணவர்கள் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், இதுவரையிலும் தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.