இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலக கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த போதும் இடைநடுவே சொதப்பியது தோல்விக்கான முக்கியமான காரணம் ஆகும்.
பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. டேவிட் வோர்னரின் இலகுவான பிடியினை குசல் பெரேரா தவறவிட்டதும் இந்த போட்டியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது. இதில் குசல் பெரேரா 35(25), சரித் அசலங்க 35(27), பானுக்க ராஜபக்ச ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும், தஸூன் சாணக்க 12(19) ஒட்டங்களையும்சமிக்க கருணாரட்ன 9 ஓட்டங்களையும் பெற்றனர். பெற்றனர்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் அடம் ஷம்பா 2 (4-12) விக்கெட்களையும், பட் கம்மின்ஸ் 2, -(4-34) விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 2 (4-27) விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது. இதில் டேவிட் வோர்னர் 65 ஓட்டங்களையும், ஆரூன் பிஞ் 37(23) ஓட்டங்களையும், ஸ்டிவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 28(26) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வனிது ஹசரங்கா 2(4-22) விக்கெட்களையும், தஸுன் ஷானக்க 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது
இந்த போட்டியின் நாயகனாக அடம் ஷம்பா தெரிவு செய்யப்பட்டார்
அணி விபரம்
இலங்கை
குசல் பெரேரா, பத்தும் நிசங்க, சரித் அசலங்க, அவிஷ்க பெர்னாண்டோ, வனிது ஹசரங்க, பானுக்க ராஜபக்ச, தஸூன் சாணக்க, சமிக்க கருணாரட்ன, டுஸ்மந்த சமீர, லஹிரு குமார, மகேஷ் தீக்சன
அவுஸ்திரேலியா அணி
டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ், மிட்செல் மார்ஷ், ஸ்டீவென் ஸ்மித், கிளன் மக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மத்திய வேட், பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், அடம் ஷம்பா, ஜோஸ் ஹெசல்வூட்
நாளை (29/102021) பிற்பகல் 3:30இற்கு பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது இரவு 7:30இற்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
