பொலிஸ் குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க குறித்த பதவியிலிருந்து பொலிஸ் திணைக்கள தலைமயகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் மா அதிபர் W.திலகரட்ன குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரியாக உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
காலி மாவட்டதுக்கான உதவி பொலிஸ் மா அதிபர் நுவான் வீரசிங்க, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முல்லேரியாவ,கொத்துடுவ, பொட்டப்பிட்டிய, பல்லவெல, மொனராகலை, அத்திமலே, வீரகுல ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவைகளின் தேவையின் அடிப்படையில், பொது சேவைகள் ஆணைக்குழு குறித்த மாற்றங்களுக்கு அனுமதி வழங்கியதனை தொடர்ந்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
