பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
இவ்வாறான பிரமிட் திட்டங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவது தவறு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி நாளிதழ் விளம்பரம் ஒன்றின் மூலம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பிரமிட் திட்டங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், பிரமிட் திட்டங்கள் இலங்கை சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது எனவும் எச்சரித்துள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் அமலாக்கத் திணைக்களம் MTFE SL குழுமம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.