வெப்பநிலை அதிகரிப்பு – ஒருவர் பலி!

யாழில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக முதியவர் ஒருவர் நேற்று (10.08) உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நபரை, வீட்டார் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version