இந்தியா – பூட்டன் இடையே விரைவில் ரயில் சேவை!

இந்தியா மற்றும் பூட்டானுக்கு இடையே சர்வதேச ரயில் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் சேவை இந்தியாவின் அசாம் மாநிலத்திலிருந்து இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவைத்தே இந்த ரயில் சேவையின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக அதிக வர்த்தகம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை பூட்டானுடன் ஏற்படுத்திக்கொள்ள முடிவதுடன், நட்புறவை ஏற்படுத்தும் வகையிலும் அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சர்வதேச ரயில் சேவைக்கான பணிகள் அனைத்தும் 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply