துருக்கியில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் இலங்கையர்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கி – இஸ்தான்புல் நகரில் நேற்று (10.08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்தான்புல்லில் விமான நிலையத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் 35 இலங்கையர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 20 இற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையர் ஒருவரின் சுவாசக்குழாய் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.