வறட்சியான காலநிலை காரணமாக 18 பிராந்திய மையங்களின் நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக நிலையங்கள் உள்ளதாகவும் அவற்றுள் 32 மையங்கள் அபாய நிலையில் இருப்பதாகவும் தேசிய நீர்வழங்கல் சபையின் தெற்கு உதவிப் பொது முகாமையாளர் சமந்த குமார தெரிவித்தார்.
அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பு அமைப்பு மூலம் குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சில பிரதேசங்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஹம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை, அம்பாறை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் வெப்பமான காலநிலை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.