தனியார் பல்கலைகழக மாணவர்கள் அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுள்ள அதே வேளையில் அரச பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வேலையற்றவர்களாகவே தமது நேரத்தை வீணடிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சைகளில் 160,000 மாணவர்கள் பல்கலைக்கழக தகமை பெறுகின்ற போதிலும், அவர்களில் 40,000 மாணவர்களுக்கு மட்டுமே அரச பல்கலைக்கழகங்களில் இடம் வழங்க முடிகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை “ஏனைய மாணவர்களும் பல்கலைக் கழகக் கல்வியைப் பெற்றிருக்க வேண்டும். அந்தக் கல்விக்காக அவர்கள் பணம் செலுத்துகிறார்கள், இதிலுள்ள சிக்கல் என்ன ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.