ஹலவத்த, இரணைவில பிரதேசத்தில் 09 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி தூக்கில் தொங்கியநிலையில் இன்று (12.08) சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஷலனி ரிதுஷா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் தாயார் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டில் பணிப்புரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமியின் பிரேதபரிசோதனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.