இலங்கை செல்லும் அவுஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கான அறிவுறுத்தல்களின் தொகுப்பை மீளாய்வு செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (13.08) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் போது  எதிர்ப்புகள், போராட்டங்கள் போன்றவற்றை அவதானிக்குமாறும், அவ்வாறான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது குடிமக்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது.

சில உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கிரெடிட் கார்டு மோசடி, அதிக கட்டணம் வசூலித்தல், போலி பொருட்களை விற்பனை செய்தல், பாலியல் துன்புறுத்தல், கொள்ளை போன்ற குற்றங்களும் நடக்கலாம் என்பதால், இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அவுஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version