மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15.08) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதே திசையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் வான் மோதியதன் பின்னர் அந்த லொறி முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியின் சாரதியும், லொறியில் பயணித்த ஒருவரும், வானின் முன் இருக்கையில் பயணித்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
உயிரிழந்த மூவரும் 38, 46 மற்றும் 58 வயதுடைய முல்லேரியா புதிய நகரம், யாழ்ப்பாணம் மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.