நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (14.08) பிற்பகல் சீனா சென்றுள்ளார்.
நாளை (16.08) முதல் நாளை மறுதினம் (20.08) வரை சீனாவின் குன்மிங் நகரில் நடைபெறவுள்ள சீனா தெற்காசிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கண்காட்சியில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
‘பொதுவான வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு’ எனும் கருப்பொருளில் இடம்பெறும் இந்த வர்த்தக கண்காட்சியில் 60 நாடுகள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.