சக மாணவிகளின் தண்ணீர் போத்தலில் விஷம் கலந்த மாணவி!

நாராம்மல பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (15.08) இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே விசக்கலவையுடனான நீரை பருகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதே தரத்தில் கல்வி கற்கும் சக மாணவிகளுடன் குரோதமடைந்தமையினால் இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாராம்மல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version