யாழ். வடமராட்சி கல்வி வலயத்திற்கான KTP Consultancy & Training நிறுவனத்தின் தொழில்முறைப் பயிற்சிகள் அந்நிறுவனத்தின் நிறுவுனரும், பெருநிறுவனப் பயிற்றுவிப்பாளருமான துரைராஜா பிரஷாந்தனால், யாழ்.கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியில் நேற்று (14.08) முன்னெடுக்கப்பட்டது.
“வெற்றிக்கான மென் திறன்கள்” (Soft Skills for Success – S3) எனும் தலைப்பில் தரம் 9 – 13 மாணவர்களுக்கும் , “சிறந்த பெறுபேறுகளுக்கான குழு முயற்சி” ( Team Effort for Better Results – TEBR) எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்கும் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சிகளை அவர் இதன்போது நடத்தினார்.
சிறப்பான தொடக்க நிறைவு உரைகளை ஆற்றி சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கிய கல்லூரியின் அதிபர் பொன்னையா அரவிந்தன் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.