இலங்கையில் இதுவரை 4000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களின் புலம்பெயர்வினால் ஏற்படும் சிக்கல்களை தடுக்க அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், அனைத்து தொழில் நிபுணர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று இன்று (16.08) பிரேரணை ஒன்றை கையளிக்க திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணம் பொருளாதார அல்லது அரசியல் ரீதியிலான பிரச்சினையல்ல என வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான நேற்று (16.08) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.