அஸ்வெசும உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆரம்பம்!

வறிய மக்களுக்கு வழங்கப்படும், நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 இலட்சம் குடும்பங்களுக்கு முதல் மாத பணத்தொகை வழங்கும் நடவடிக்கை இன்று (15.08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த பணத்தொகையை செலுத்துவதற்கு தேவையான பணத்தை அந்தந்த மாகாண வங்கிகளுக்கு நிதி அமைச்சு வழங்கும் என நலன்புரி நல வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், நிவாரணப் பயன் திட்டம் தொடர்பாக கிடைக்கப் பெற்ற 217,000 ஆட்சேபனைகளின் எண்ணிக்கையை 5 நாட்களுக்குள் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் ஆராய்ந்து இறுதி தீர்மானம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், மேலும் எட்டு லட்சம் முறையீடுகள் ஆராயப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version