மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை இந்த ஆண்டு முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் துறை அமைச்சர் அனுப பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.
சமூக வலுவூட்டல் அமைச்சில் நேற்று (16.08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சரின் அறிவிப்பின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகையை 10ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் உதவித்தொகை 25,000 லிருந்து 40,000 ஆக உயர்த்தவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களுக்காக வழங்கப்படும் 15,000 ரூபாய் உதவித் தொகையை 35,000 ரூபாவாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஊனமுற்றோருக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் 250,000 உதவித்தொகை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளை சீரமைக்க வழங்கப்பட்ட 150,000 உதவித்தொகையை, 250,000 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.