சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளிக் கல்வி முறையைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பயிற்சி இல்லாத முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்படும் என்றும், இதற்கு விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இரண்டு வருட முன்பள்ளிக்கான வேலைக் கட்டமைப்பை தேசிய கல்வி அல்லது சர்வதேச தரத்தின்படி உருவாக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் மூலம் சான்றிதழ் படிப்பை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய கல்வி நிறுவனம் மற்றும் கல்வியாளர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார்.