இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா அணி கடும் போராட்டத்துக்கு மத்தியில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி சிறப்பாக பந்துவீசிய போதும் தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தென்னாபிரிக்கா அணியின் முக்கிய வீரர்களை இலங்கை அணி ஆட்டமிழக்க செய்த போதும் டேவிட் மில்லர், ககிசோ ரபாடா ஆகியோர் அதிரடியாக துடுப்பாடி வெற்றியினை பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணி போதியளவான ஓட்டங்களை துடுப்பாட்டத்தில் பெற முடியாமல் போனதே இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
நல்ல ஆரம்பத்தை இலங்கை அணி பெற்ற போதும் தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சாளர் ரப்ரைஸ் ஷம்சியின் பந்துவீச்சில் தடுமாறி விக்கெட்களை இழந்தமையினால் ஓட்ட எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது.
இலங்கை அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 142 ஓட்டங்களை பெற்றது.
சிறப்பாக இறுதி வரை போராடிய பத்தும் நிசங்க 72(55)ஓட்டங்களை பெற்றார். சரித் அசலங்க 21(14) ஓட்டங்களை பெற்றார். தஸூன் சாணக்க 11 ஓட்டங்களை பெற்றுக்கொணடார்.
பந்துவீச்சில் ரப்ரைஸ் ஷம்சி 3 (4-17), டுவைன் பிரடோரியஸ் 3 விக்கெட்களையும் , அன்றிச் நொர்க்யா , இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.
இதில் டெம்பா பவுமா 46 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் அட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் எய்டன் மார்க்கம் 19 ஓட்டங்களையும், பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிது ஹசரங்க 3 விக்கெட்களையும், டுஸ்மாந்த சமீர 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.