இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடைகளுள் 04 கடவுச்சீட்டுகளை மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால், கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் புத்தளம் கல்பிட்டி பகுதியை சேர்ந்த 48 வயதான வர்த்தக பெண் என தெரியவந்துள்ளது.
அவர் இன்று (21) அதிகாலை 04.41 மணியளவில் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்வதற்காக குறித்த பெண் கடவுச்சீட்டுகளை மனித கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 04 கடவுச்சீட்டுகளுடன், விமானநிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.