இலங்கை, பொருளாதார இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வரும் நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று பொறிமுறையின் கீழ் பங்களாதேஷிடமிருந்து பெற்ற 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் டொலர்களை மீண்டும் செலுத்தியுள்ளதாக ‘டாக்கா ட்ரிப்யூன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அதிகாரிகளால் முதல் தவணை செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய பங்களாதேஷ் வங்கியின் (BB) செய்தித் தொடர்பாளர் Md Mezbaul Haque, கடந்த வாரம் அதாவது ஆகஸ்ட் 17ம் திகதி குறித்த தொகை பெறப்பட்டதாக அறிவித்துள்ளார். மேலும்,”இந்த மாதத்திற்குள் இரண்டாவது தவணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இரண்டாவது தவணை தொகை எவ்வளவு என்பது குறித்து எதுவித தகவலையும் அவர் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 செப்டம்பர் மாதம், பொருளாதார ரீதியில் பெரும் வீச்சியை எதிர்க்கொண்ட இலங்கை மீண்டு வருவதற்காக பங்களாதேஷ் தனது வெளிநாட்டு இருப்பில் இருந்து $200 மில்லியன் டொலர் கண் தொகையை இலங்கைக்கு வழங்கியிருந்தது.