ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழக்கவில்லை என, ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலோங்கா செய்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களில் அவர் உயிரிழந்ததாக வெளியாகிய தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். “ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
நான் அவரிடம் தான் கேட்டேன். அவர் மிகவும் நலமாக உயிருடன் இருக்கிறார் மக்களே,” என்று ஓலோங்கா ட்வீட் செய்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு Zembabwe கிரிக்கெட் வீரர் ஹீத் தனது இளம் வயதில் உயிரிழந்தார் எனும் செய்தி பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியத்துடன், பலரை கவலையடைய செய்தது.
தற்போது அந்த செய்தியில் உண்மையில்லை எனும் தகவல் அவரது ரசிகர்களும், சக வீரர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் மறைந்துவிட்டார் எனும் செய்தியை வீ மீடியா செய்திகள் ஊடாகவும் நாம் தந்திருந்தோம். இப்போது அது வதந்தி எனும் செய்தியை உறுதி செய்கின்றோம்.