சுகாதார கட்டமைப்பு சீர்க்குலைந்து போகும் அபாயம்!

மனித வளங்களை முறையாக நிர்வகிக்காத காரணத்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (23.08) நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஏற்கனவே பணிபுரியும் மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி நாட்டை விட்டு வெளியேறுவதும், வெளிநாட்டில் படிக்கும் விசேட மருத்துவர்கள் நாடு திரும்புவதாக இல்லை. புதிய வைத்தியர்கள் சுகாதார அமைச்சுடன் இணைந்து சேவையாற்ற மறுப்புப்பதும், பட்டபின் படிப்பு கற்கைகளை மோற்கொள்ளாமை போன்ற காரணங்களால் விசேட வைத்தியர்கள் உட்பட வைத்தியர்களின் பற்றாக்குறை நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதற்கு விரைவான தீர்வை வழங்க அரசாங்கம் தவறினால் தரமான சுகாதார சேவையை வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடையும்.

எனவே,மருத்துவர்கள் பணிபுரிவதற்கு ஏற்ற மனநிறைவை ஏற்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும், இந்த மூளைசாலிகள் வெளியோற்றம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே அரசுக்கு தகவல் தெரிவித்தும் அரசாங்கம் உரிய தீர்வு காணவில்லை.

அதிக எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு,சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த விடயங்கள் குறித்து சில மாதங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சும் அரசாங்கமும் கவனம் செலுத்தியிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

இந்த நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக,இலவசக் கல்விக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாற்று முறைகளின் ஊடாக உயர்தர வைத்தியர்கள் உருவாக்கப்பட வேண்டும். இலவசக் கல்வி எந்த வகையிலும் இல்லாதொழிக்கப்படக் கூடாது.

ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும் Meningococcal தடுப்பூசி இந்நாட்டில் 12 மாதங்களாக கிடைக்கவில்லை. , இன்றும் இந்தப் பற்றாக்குறை தீர்க்கப்படவில்லை. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

காலி சிறைச்சாலையில் தொற்று நோய் பரவும் நிலை கூட உள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கும் போதிலும் சுகாதார அமைச்சு அதனைப் பெற்றுக்கொள்ள தவறியுள்ளது ஏன்?

நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் தாம் கேட்கும் கேள்விகளுக்கு சுகாதார அமைச்சருக்கோ,சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கோ பதில் தெரியாவிட்டால், சுகாதாரத்துறைக்கு இறைவனே துணை நிற்க வேண்டும். சாதாரண தரவுகளைக்கூட அறியாமலா அரசாங்கம் செயற்படுகிறது என்றொரு பிரச்சினை எழுந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இன்று பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தின் 13 ஏக்கர் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக இந்த அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் அறிவித்துள்ளார். மல உர அறிக்கை இன்னும் கோப் குழுவில் விவாதிக்கப்படவில்லை. இவ்வாரானவர்கள் இந்த சபையில் இருக்கலாம்.

அதிகாரி எனும் உத்தியோகத்தரை அபத்தமான குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி இருக்கிறது. சில எம்.பிக்கள் கேள்வி கேட்டால் ஓடி விடுகிறார்கள். பதில் சொல்ல அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version