இலங்கை கிரிக்கட்டை ஊழலற்ற நிறுவனமாக மாற்ற கோரிக்கை!

இலங்கையின் பெருமையை உலகத்தின் முன் கொண்டு சென்று பல வெற்றிகளை பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட், தனது அதிகாரத்தின் தவறினால் ஊழல் நிறுவனமாக மாறியுள்ளது, இதை ஊழலற்ற நிறுவனமாக மாற்ற சட்ட அமைப்பை உருவாக்க கோரி ‘இலஞ்ச ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடியுரிமை’ அமைப்பினர், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் இன்று (23.08) மகஜர் ஒன்றை கையளித்தனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனதை அதன் பணிப்பாளர் குழுவில் உள்ள 14 பேரும் தங்களது தனிப்பட்ட சொத்தாக கருதுவத்தால், இந்த அமைப்பைச் சரியான பாதையில் கொண்டு செல்ல, தேவையான விதிமுறைகளை ஒரு சட்டமாக மாற்றியமைத்தாலே இதை மீட்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஊழல் மலிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அரசு புதிய சட்டத்தின் மூலம் ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் எனவும் அதற்கு சாத்தியமான சட்ட அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகஜர் கையளிக்கும் இந்நிகழ்வில் இலஞ்ச ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடியுரிமை அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார மற்றும் அந்த அமைப்பின் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

இலங்கை கிரிக்கட்டை ஊழலற்ற நிறுவனமாக மாற்ற கோரிக்கை!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version