இன்று புகையிரத சேவைகள் வழமைக்கு முழுமையாக திரும்பிய நிலையில், இடையூறு ஏற்பட்டது. இன்று காலை வேளையில் புகையிரத சமிக்ஞையில் ஏற்பட்ட பழுது காரணமாக புகையிரத சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக றாகமை புகையிரத நிலையத்தில் இரு புகையிரதகங்கள் மோதி சிறு விபத்துக்குள்ளாகின.
இந்த நிலையில் ஏற்பட்ட பழுதுகள் சீர் செய்யப்பட்டு புகையிரத சேவை வழமை போல் இடம்பெறுவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
