மன்னார் அடம்பன் பகுதியில் இன்று (24.08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 46 மற்றும் 53 வயதுடைய பள்ளிமடு மற்றும் உலியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களின் விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.