சோள இறக்குமதியில் பெரும் மோசடி- மீண்டும் ஏமாற்றுகிறார்கள்!

சோளம் மீதான இறக்குமதி வரி 75 ரூபாயில் இருந்து 25 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 50 ரூபா இழப்பு ஏற்படும் என்றும், அது தொடர்பான வர்த்தமானியில் இறக்குமதியின் அளவு குறிப்பிடப்படவில்லை என்றும், எடுத்துக்காட்டாக ஒரு இலட்சம் மெட்ரிக் டொன் இறக்குமதி செய்யப்பட்டால் 5 பில்லியன் இழப்பு ஏற்படும் என்றும், 2 இலட்சம் இறக்குமதி செய்தால் 10 பில்லியன் நஷ்டம் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ரூபா 25 குறைக்க வேண்டும் என்பதே உணவுக் குழுவின் பரிந்துரையாக இருந்தாலும்,
இப்போது 50 ரூபாவால் குறைக்க தயாராகியுள்ளனர் என்றும், இங்கு பெரும் மோசடி நடப்பதாகவும்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஒருவரும்,மலையக ஆராய்ச்சி நிறுவனமொன்றின் அதிகாரி ஒருவரும் இதற்குத் தொடர்பு என்றும்,இதற்கான காசோலைகள் கூட வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(24.08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தேங்காய் எண்ணெய் மற்றும் சீனி மோசடி போன்றது என்றும், இது தொடர்பாக நாளை நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், நாட்டு மக்களின் பணமே இவ்வாறு வீணடிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version