கடைசி விவசாயி திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாத்துறையில் ஆண்டுதோறும் சிறந்த சினிமா கலைஞர்கள், படங்கள், நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
இதில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான கடைசி விவசாயி திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாகவும் இந்த படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.