குழந்தைகள் குறித்து பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையச் செயற்பாடுகளுக்கு அடிமையாவதால் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் இருப்பதாக விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறுகிறார்.

குழந்தைகளைத் தாண்டி இந்தச் சாதனங்களைப் பயன்படுத்துவதில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

காலி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இது முதலில் குழந்தைகளின் கல்வியை சீர்குலைக்கிறது. அதன் பிறகு அவர்கள் இணையத்தில் உலா வருகிறார்கள்.

அதன் பிறகு வீடியோ கேம்களுக்கு அடிமையாகுகிறார்கள். இது ஒரு தீவிரமான மனநிலை. மற்றும் மனநோய். இப்போது பெற்றோர்களுக் கூட எதிரிகளாக மாறிவி்ட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version