அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலைகள் இன்று (28) ஆரம்பமாகவுள்ளன.
இரண்டாம் பள்ளி பருவத்தின் முதல் கட்டம் ஆகஸ்ட் 17ம் திகதி முடிவடைந்தது. எவ்வாறாயினும், கண்டி நகர எல்லையிலுள்ள அரச பாடசாலைகள் இன்று முதல் 03 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரஹெரா திருவிழாவினால் நகரில் காணப்படும் கடும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு இன்றும்(28) நாளையும் (29) எதிர்வரும் 31ஆம் திகதியும் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலைக் காலத்தில் பிள்ளைகள் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும் எனவும், வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு மேலதிகமாக தண்ணீர் போத்தல் ஒன்றை எடுத்து வருவதே சிறந்ததெனவும் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.