கந்தானை பகுதியில் விபத்து!

கந்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதி இன்று (28.08) விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த லொறி மீது புகையிரதம் மோதியதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ரயில் வழமையாக இயங்குவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version