இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து -ஒருவர் பலி!

கொழும்பு – கண்டி வீதியின் கஜுகம பகுதியில்  இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று (29.08) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொழும்பில் இருந்து தங்கொவிட்ட நோக்கி பயணித்த அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று  எதிர்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் தனியார் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார். அத்துடன் 05 ஆண்களும், 04 பெண்களுமாக 09 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேநேரம் விபத்தில் உயிரிழந்தவர் கம்புரதெனிய, பதங்கோவிட்ட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.  சடலம் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை  நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version