ஆசிய கிண்ண தொடர் 2023 இன்று(30.08) பாகிஸ்தானில் ஆரம்பிக்கிறது. ஆசிய கிண்ண தொடரை நடாத்தும் பாகிஸ்தான் மற்றும் முதற் தடவை ஆசிய கிண்ண தொடரில் விளையாடும் நேபாளம் ஆகிய அணிகள் முதற் போட்டியில் மோதுகின்றன.
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகலையில் நாளை நடைபெறவுள்ளது. 02 ஆம் திகதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியோடு இந்தியா அணி தனது முதற் போட்டியினை ஆரம்பிக்கிறது.
இலங்கை அணி தவிர ஏனைய சகல அணிகளும் பலமான அணிகளோடு களமிறங்குகின்றன. உபாதைகள் காரணமாக இலங்கை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் நால்வர் விளையாடத நிலையில் இலங்கை அணியின் பலம் குறைந்தே காணப்படுகிறது.
உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக ஆசியக் கிண்ண தொடர் நடைபெறும் நிலையில் இந்த தொடர் விறு விறுப்பானதாக எதிர்பார்க்கப்படுகிறது.
