அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் (Chris Van Hollen) இன்று (30.08) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாடுகளது உறவுகள் தொடர்பிலும், இலங்கையின் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version