இன்றைய வானிலை!

எதிர்வரும் சில நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழைப் பெய்யும் எனவும், சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

அதேபோல் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version